Friday, January 20, 2006

பருவங்கள் ... சில கிறுக்கல்கள் !


இலையுதிர்காலம்

=================






1
Getting old colorfully ...
இதுதானோ?





2
பச்சை நிற ஃபர்தாவை களைந்து
பட்டாம்பூச்சிகளாய் வண்ணம் பூண்டன
இந்த வாசமில்லாப் பூக்கள் ...
இது.. இலையுதிர்காலமல்ல...
இலைமலர்காலம்..


வசந்த காலம்

===========




1
உயிர்த்தெழுதலைக் கொண்டாட ...
விழாவெடுக்கின்றன மரங்கள்...
=======================

2
பூக்கள் மலர்ந்த பின்னே...
மெல்ல தலை தூக்கும் இலைகள்...
இலைக்குப் பிறகு பூ யார் சொன்னது?

========================


குளிர்காலம்

=========







1
குளிரும் காலை ...
சூரியனை வரவேற்க ஜன்னல் திரை விலக்கினேன்...
வெண்பஞ்சு மேகக்கூட்டம் வாசலில்..
இரவெல்லாம் பெய்த பனிக்குவியல்...
=======================================

2
சூடு தாங்காமல் உருகி நின்றது
கையில் விழுந்த நட்சத்திரம் ...
இல்லை.. பனித்துகள்!
=======================

3
இலைகளை உதிர்த்து...
பசுமையைத் தொலைத்து...
விதவையான மரங்களுக்கு ...
வெள்ளாடை போர்த்துகிறது...
பனி...
==================

4
தும்பைப் பூமாரி பொழிகிறது ...
வழியங்கும் வெண்பட்டாடை விரிப்பு...
தேவதைகள் உடலெங்கும் பூக்களை ஏந்தி ....
சாலையோரம் வரிசைகட்டி நிற்கின்றன ....
வெண்முத்துப் பல்லக்கில் ...
மெல்ல ஊர்வலம் போகின்றேன்...
பனிமழை பெய்கிறது...
=================






5
Icecream சாப்பிட்ட சிறுகுழந்தையாய்
அங்கங்கே அப்பிக்கொண்டு சொட்டும்
பனியைத் தாங்கி நிற்கும் மரம்...
*************************************

10 comments:

Anonymous said...

colorful kavaithaikal

Anonymous said...

Dear Anitha

This is Rathi. Romba naal kazhichu unnoda kavithaigal padikaren. I see a marked changed in the mood of your poems now. Keep the good stuff going.

Love
Rathi

Anonymous said...

Dear Anitha

This is Rathi. Romba naal kazhichu unnoda kavithaigal padikaren. I see a marked changed in the mood of your poems now. Keep the good stuff going.

Love
Rathi

கொங்கு கோபி said...

Hi anitha,

Nalla irukku...enakku kavithai-galaivida I liked the pictures...

Gopi

Anonymous said...

அனிதா

என்னை மாதிரி ஆட்களுக்கே புரியற அளவுக்கு மிக எளிமையான கவிதைகள்... மிகவும் ரசித்தேன்.... :)

புகைப்படங்கள் மிகவும் பொருத்தமாக இருந்தது...... உன்னிடம் உள்ள மற்ற புகைப்படங்களையும் தனியாக பதிவு செய்யவேண்டும் என்பது என்னுடய விருப்பம்....

அன்புடன்
காஞ்சனா

வரலாறு.காம் said...

நல்ல கவிதைகள் அனிதா.

//பூக்கள் மலர்ந்த பின்னே...
மெல்ல தலை தூக்கும் இலைகள்...
இலைக்குப் பிறகு பூ யார் சொன்னது?//

இவை நான் மிகவும் ரசித்த வரிகள்.

நன்றி
கமல்
www.varalaaru.com

சோமி said...

அழகான படங்களும் அழகான வரிகளும். வாழ்த்துக்கள்.

Anitha(Nikki's mom) said...

வந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி! especially to varalaaru.com and சோமி (becasuse rest are my friends)
- அனிதா

Antro Peter said...

Good website... I liked the simplicity of your poem to make the common man understand!!

Great job and keep up the good work!

Anitha(Nikki's mom) said...

Thanks Antro. I am hard-pressed for time these days.