Friday, February 03, 2006

இலக்கணக் குறிப்புகள்
வாழ்க்கை - வினைத்தொகை
காதல் - முரண்தொடை
மரணம் - வினைமுற்று

வாழ்க்கை
தேடுதலில் தொலைந்து போவது...
பின்...
தொலைந்ததைத் தேடுவது...

2 comments:

MSK said...

மற்ற இரண்டும் புரிந்தது. அது என்ன வாழ்க்கை - வினைத்தொகை?

வாழ்க்கையில் எந்த (உருப்படியான) செயலும் செய்வதில்லை என்று அர்த்தமா?

Anitha said...

msk,

வினைத்தொகை 3 காலங்களையும் குறிக்கும். உதாரணம் : ஊறுகாய் - ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய். வாழ்க்கை - நாம் வாழ்ந்தது, வாழ்ந்து கொண்டிருப்பது, வாழப்போவது என்ற அர்த்தத்தில் எழுதியது.

வந்தமைக்கு நன்றி!