Friday, January 20, 2006

பருவங்கள் ... சில கிறுக்கல்கள் !


இலையுதிர்காலம்

=================






1
Getting old colorfully ...
இதுதானோ?





2
பச்சை நிற ஃபர்தாவை களைந்து
பட்டாம்பூச்சிகளாய் வண்ணம் பூண்டன
இந்த வாசமில்லாப் பூக்கள் ...
இது.. இலையுதிர்காலமல்ல...
இலைமலர்காலம்..


வசந்த காலம்

===========




1
உயிர்த்தெழுதலைக் கொண்டாட ...
விழாவெடுக்கின்றன மரங்கள்...
=======================

2
பூக்கள் மலர்ந்த பின்னே...
மெல்ல தலை தூக்கும் இலைகள்...
இலைக்குப் பிறகு பூ யார் சொன்னது?

========================


குளிர்காலம்

=========







1
குளிரும் காலை ...
சூரியனை வரவேற்க ஜன்னல் திரை விலக்கினேன்...
வெண்பஞ்சு மேகக்கூட்டம் வாசலில்..
இரவெல்லாம் பெய்த பனிக்குவியல்...
=======================================

2
சூடு தாங்காமல் உருகி நின்றது
கையில் விழுந்த நட்சத்திரம் ...
இல்லை.. பனித்துகள்!
=======================

3
இலைகளை உதிர்த்து...
பசுமையைத் தொலைத்து...
விதவையான மரங்களுக்கு ...
வெள்ளாடை போர்த்துகிறது...
பனி...
==================

4
தும்பைப் பூமாரி பொழிகிறது ...
வழியங்கும் வெண்பட்டாடை விரிப்பு...
தேவதைகள் உடலெங்கும் பூக்களை ஏந்தி ....
சாலையோரம் வரிசைகட்டி நிற்கின்றன ....
வெண்முத்துப் பல்லக்கில் ...
மெல்ல ஊர்வலம் போகின்றேன்...
பனிமழை பெய்கிறது...
=================






5
Icecream சாப்பிட்ட சிறுகுழந்தையாய்
அங்கங்கே அப்பிக்கொண்டு சொட்டும்
பனியைத் தாங்கி நிற்கும் மரம்...
*************************************